வட ஆபிரிக்க நாடான லிபியாவில் இரண்டு மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து இதுவரை 50 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 70 பேர் மனித புதைக்குழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவிற்குள் செல்ல முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் முக்கிய போக்குவரத்து இடத்திலேயே இந்த மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்கள் ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் எனவும், இவர்களை புதைப்பதற்கு முன்னரே சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com