யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி இரண்டு இளைஞர்களிடம் ஒரு கோடியே 14 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
யாழப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரிடம் 84 இலட்சம் ரூபாவை தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிய பின்னர் குறித்த குழுவினர் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இளைஞனை ஏற்றிச்சென்ற கார் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிசார் கூறினர்.
இதேவேளை மானிப்பாய் பகுதியிலும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பேர் கொண்ட குழு, குறித்த இளைஞனிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களுடனும் தொடர்புடைய பிரதான சந்தேகநபகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரும், பொலிசாரும் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com