இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கோ, தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கோ E-8 தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழ் தொழில் அல்லது அது தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவில் தொழில் வழங்குவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பணம் வசூலிக்கும் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளமையை அடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அதன்படி, எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனிநபரோ அல்லது தனிநபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என பணியகம் அறிவித்துள்ளது.
எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ அத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது
Link: https://namathulk.com