2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், கல்வியை மாற்றுவோம், இலங்கையை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் கல்வி சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலும் கல்வி அமைச்சின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு பகுதியாக, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் பொதுக் கல்வியை நவீன மயப்படுத்தும் திட்டத்திற்கு கல்வி அமைச்சின் யோசனைகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
உலக வங்கி மற்றும் கல்வி அமைச்சின் யோசனைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
அத்துடன், இத்திட்டத்தின் கீழ் மேலதிக நிதி ஒதுக்கீடாக 50 மில்லியன் டொலர் உலக வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com