உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை விரைவில் நடாத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய, உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட சட்டமூலம் ) தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற விசேட அமர்வை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழு, பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி தலைமையில் நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட சட்டமூலம் ) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தை 17 ஆம் திகதி நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு முன்னர் சமர்பிக்க முடியும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com