கொழும்பு 02, ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர (வீதி ஊர்வலம்) இன்றும், நாளையும் இரவு 7.30 மணி முதல் 10.30 வரை நடைபெற உள்ளமையினால், விசேட போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பெரஹெர விகாரையில் ஆரம்பமாகி ஜினரத்தன மாவத்தை வழியாகச் சென்று, ஹுனுபிட்டிய குளம் வீதிக்கு திரும்பி, ராமநாயக்க மாவத்தை சந்திக்கு வந்து, ராமநாயக்க மாவத்தை வழியாக ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி வரை பயணிக்கவுள்ளது.
ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக அல்ட்ரயார் அவென்யூ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அல்ட்ரயார் அவென்யூ வழியாக ஸ்டேபிள் தெரு சந்தி வரை பயணித்து அங்கிருந்து வலதுபுறம் திரும்பி ஸ்டேபிள் தெரு, ப்றேப்ரூக் பிளேஸ், ஊடாக பயணித்து ஜினரத்தன மாவத்தை வழியாக கங்காராம விகாரையை ஊர்வலம் சென்றடைய உள்ளது.
இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் மேற்படி வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதன்படி, கொம்பனி வீதி சந்தியிலிருந்து வரும் வாகனங்கள் யூனியன் ப்ளேஸ் ஊடக லிப்டன் சுற்றுவட்டம் ஊடான மாற்று வழியினை பயன்படுத்த முடியும்.
ஜேம்ஸ்பீரிஸ் வீதி, நவம் வீதி சந்தியிலிருந்து தெற்கு நோக்கி நவம் வீதி வழியாக பயணிக்கும் வாகனங்கள் உத்ராநந்த வீதி சந்தியிலிருந்து வலது பக்கம் திரும்பி , உத்ராநந்த வீதியினூடாக பயணிக்க முடியும்.
அத்துடன், பித்தள சந்தியிலிருந்து பயணிக்கின்ற வாகனங்கள் தர்மபால வீதி, யூனியன் ப்ளேஸ் ஊடாக பயணிக்க முடியும்.
Link : https://namathulk.com