கிளிநொச்சி, தருமபுரம், நெத்தலியாற்று பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்டையில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 45 போத்தல் கசிப்பு, 233 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com