நாளை 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாளை பெளர்ணமி தினம் என்பதால் மின்சார பாவனைக்கான கேள்வி குறையும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
இதனால் நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த சில தினங்களுக்கான மின்சார விநியோக முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று பிறப்பாக்கிகளும் செயழிலந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் நேற்றும் , இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com