மூன்று தசாப்தகால யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் கிளிநோச்சி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் இதுவரை முழுமையாக கண்ணிவெடி அகற்றப்படவில்லை.
பல இடம்பெயர்வுகளின் பின்னர் தமது சொந்த கிராமங்களுக்கு மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் கிளிநொச்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி , பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் இதுவரை கண்ணிவெடி அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இந்த கிராமங்களை பூர்வீகமாக கொண்ட மக்கள், கண்ணிவெடியற்ற சுதந்திர பூமி எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடனே வாழ்கின்றனர்.
இந்த பின்புலத்தில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
சில பகுதிகளில் மிக ஆபத்தான கண்ணிவெடிகள் காணப்படுவதாகவும், இதனால் காயங்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் ஜப்பான் தூதுக் குழுவிடம் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 2028 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி பங்களிப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com