வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குறித்த நபர் நேற்று இரவு வீட்டிலிருந்து தொழில் நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.
சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதான, சுப்பையா ஆனந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிசாரிடம் ‘நமது TV’ செய்திப் பிரிவினர் வினவிய போது,
குறித்த நபரின் மரணம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
அத்துடன், பிரதே பரிசோதனையின் பின்னரே குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணத்தை அறிய முடியும் எனவும் பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com