இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ள இராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தனது 87வது வயதில் இறையடி சேர்ந்தார்.
28 வருடங்களாக 100 ரூபாய் ஊதியத் தொகையில் இவர் பணியாற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்கவாதம் காரணமாக அயோத்தியிலுள்ள வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அயோத்தி இராமர் கோயில் கட்டும் பணியில் முக்கிய பங்காற்றிய அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.
Link: https://namathulk.com