இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவை இம்மாதம் 16ஆம் திகதி ஆரம்பம்.

Aarani Editor
1 Min Read
கப்பல் சேவை

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவை 2023 ஆம் ஆரம்பிக்கப்பட போது, அப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் அச்சேவை இடைநிறுத்தப்பட்டது.

பின்னர், சுபம் எனும் கப்பல் நிறுவனத்தின் கீழ் கடந்த வருடம் மீள் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவை, வாரத்திற்கு 05 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழையினால் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு தடைகளின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த கப்பல் சேவை தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி பிரச்சினை காரணமாக இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வாரத்தில் ஆறு நாட்கள் குறித்த சேவை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் கப்பல் சேவை இடம்பெற உள்ளது.

போக்குவரத்துக்கான டிக்கெட்டுகளை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாக அல்லது 021 2224647, 0117642117 இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து கொள்ளுமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *