ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போர் நடைபெற்றுவரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.
உக்ரைனின் கீவ் நகரில் இடம்பெற்ற இத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நால்வர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒன்பது வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும், இந்தத் தாக்குதல் கீவின் ஹோலோசிவ்ஸ்கி, போடில்ஸ்கி, ஸ்வியாதோஷின்ஸ்கி மற்றும் ஒபோலோன்ஸ்கி ஆகிய மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரே இரவில் ரஷ்யா ஏவிய ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஆறு ஏவுகணைகளையும், 71 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவுடன் நிலங்களை மாற்றுவதற்கு உக்ரைன் தயாராக இருக்கும் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதைத் தொடர்ந்து, இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.
Link : https://namathulk.com