புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் செயற்படும் டவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த ‘எதிர்பார்ப்பின் மேடை’ நிகழ்வு ‘டவர் நாடக விழா’ டவர் மண்டப மன்றத் தலைவர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று ஆரம்பமாகியது.
நாடகத்தை ரசிப்பதற்கு தரமான பார்வையாளர்களை உருவாக்குதல், நாடக கலைஞர்களின் வருமானத்தை அதிகரித்தல், நாடகத்தை ஊக்குவித்தல் மற்றும் நாடகம் தொடர்பாக பரந்த சமூக கலந்துரையாடல்களை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை நாடக விழா தொடர்து 10 நாட்கள் இடம் பெறும். இங்கு 14 முழு நீள நாடகங்கள், 12 குறு நாடகங்கள் மற்றும் 08 சிறுவர் நாடகங்கள் என மொத்தமாக 34 நாடகங்கள் 68 முறை மேடையேற்றப்பட உள்ளன.
நாடக விழா நடைபெறும் 10 நாட்களும் டவர் கலைஞர்கள் 20 பேருக்கு வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படுகின்ற ‘டவர்’ பாராட்டு விருது மற்றும் பண பரிசில்கள் வழங்கப்படும்.
இதில் முதல் விருது சிரேஷ்ட கலைஞர் விஜேரத்ன வரகாகொடவிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் வழங்கி வைக்கப்பட்டது.
Link : https://namathulk.com