கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ், பாதசாரி மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தின் போது பலத்த காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பரந்தன் பகுதியை சேர்ந்த 46 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com