மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முதலில் குரங்குகள் மீது குற்றம் சுமத்திய அரசாங்கம், தற்போது கடந்த அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பில், எதிர்க்கட்சி தலைவர் தனது X தளத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூரியபடல மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், கேள்விக்கான விநியோகத்தை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமுமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com