ஜெர்மனியில் அதிவேக ரயிலுடன் , ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
ரயிலில் இருந்த ஏனைய பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Link : https://namathulk.com