மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோ குடியரசில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது.
அரசின் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் M-23 எனக் குறிக்கப்படும் கிளர்ச்சிக்குழு அண்மையில் அங்குள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதோடு, சிறைச்சாலைகளையும் தீயிட்டு எரியூட்டியுள்ளனர்.
ஐநாவின் அமைதிகாக்கும் படையானது உள்நாட்டுப்போரின் தீவிரத்தன்மை காரணமாக கொங்கோ அரசிற்கு உதவ முன்வந்துள்ளது.
இந்த உள்நாட்டுப்போரின் தீவிரத்தன்மை காரணமாக ஐக்கியநாடுகள் சபை, கொங்கோவிற்கு 70% நிதியை வொஷிங்டனில் இருந்து பெற்றுக்கொடுத்திருந்தது.
2024 ஆம் ஆண்டில் DRC க்கான ஐநா மனிதாபிமான திட்டத்தின் 1.3 பில்லியன் டொலர்களில் 910 மில்லியன் டொலர்கள் அமெரிக்காவிலிருந்தே கிடைக்கப்பெற்றிருந்தன.
தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து நிதியுதவிகள் நிறுத்தப்பட்டமையால், கொங்கோ குடியரசானது பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய உதவி நன்கொடையாளராக அமெரிக்க நிதியுதவி உள்ள நிலையில், அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியை குறைத்து மறுவடிவமைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சியானது பல்வேறுபட்ட குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Link : https://namathulk.com