2025 உலக அரச மாநாட்டில் விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
மனித வரலாற்றின் தீர்மானகரமான திருப்புமுனையில் இருந்துகொண்டு முன்னொருபோதும் இருந்திராத உலகளாவிய ஒத்துழைப்பினை வேண்டிநிற்கின்ற தருணத்தில் நடாத்தப்படுகின்ற தனித்துவமான மாநாட்டில் உரை நிகழ்த்தக் கிடைத்தமை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்
வியத்தகு வரலாற்றினையும் எதிர்காலம் பற்றிய சுபமான கனவினைக் காண்கின்ற, நிகழ்காலத்தையும் அகல் விரிவான அரசியல் மற்றும் சமூக அறிவினாலும் கட்டி வளர்க்கப்பட்ட பிரஜைகளைக் கொண்ட அழகான தீவு இலங்கை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மானிட வர்க்கம் பற்றிய முக்கியமான பிரிவுகளில் எதிர்கால உபாய மார்க்கங்களையும் திட்டங்களையும் அபிவிருத்தி செய்தல் மீது கவனஞ் செலுத்தி நடாத்தப்படுகின்ற இந்த மாநாடு எதிர்கால உலகின் நல்வழியுரிமைக்கு உறுதுணையாக அமையுமென தான் நம்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார் .
நிகழ்காலத்தில் நாங்கள் நாடுகள் என்றவகையிலும் பிராந்திய ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் அளப்பரியவை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற நாம் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டுமென்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதும் மிகமுக்கியமானதாக அமைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதிலும் மனநோய்க்கான பொருளாதாரக் கிரயம் 16 ரில்லியன் டொலர்களை விஞ்சியதாக அமையுமென சுகாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் ஒன்றுசேர்ந்து அழகான வாழ்க்கையை அழகான உலகத்தை உருவாக்கிடுவோம்” என வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மாநாட்டில்கலந்துகொண்ட அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com