இலங்கை ரயில்வே திணைக்களம் பயணிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் மேப்படுத்தி வருகிறது.
பயணிகளுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அதேநேரத்தில், பயணிகளின் ஒய்வு, பாதுகாப்பு என அனைத்து சேவைகளையும் இலங்கை ரயில்வே திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெண்கள் ஓய்வெடுப்பதற்கான புதிய ஒய்வறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிக ரயில் பயணிகள் ஒன்றுகூடும் இடமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையம் காணப்படுகிறது.
தூரப் பகுதிகளில் இருந்து செல்வோர் ஓய்வெடுப்பதற்கான ஒரு சிறந்த இடத்தை ரயில்வே திணைக்களம் அங்கு ஒழுங்குப்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கதே.
எனினும், குறித்த ஒய்வு அறைக்கான பெயர் பதாகையில் தமிழ் மொழியில் பிழை காணப்படுகின்றமை தொடர்பில் நமது TV ஆராய்ந்தது.
பெண்கள் ஓய்வறை என்பதற்கு பதிலாக “ “என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் ஜெ.டி.ஐ.ஜெயசுந்தரவிடம் நமது TV செய்திப் பிரிவினர் வினவினர்.
தவறுதலாக இந்த பிழை ஏற்பட்டுள்ளதாகவும் , இரண்டு நாட்களுக்குள் அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.
அத்துடன் இலங்கை ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய எந்தவொரு விடயத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின் தம்மிடம் நேரடியாக அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே பொது முகாமையாளரின் இணக்கத்திற்கு அமைய, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் காணப்படும் பெண்கள் ஓய்வறைக்கான பெயர் பதாகை மாற்றம் தொடர்பில் நமது TV செய்திப் பிரிவினர் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்போம்.
Link : https://namathulk.com