கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெண்கள் ஓய்வெடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெயர் பதாகையில் தமிழ் மொழியில் பிழை காணப்படுவதை நமது TV செய்திப் பிரிவு சுட்டிக்காட்டியது.
இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் ஜெ.டி.ஐ.ஜெயசுந்தரவிற்கு அறிவித்ததும், குறித்த தவறை திருத்த 02 மணித்தியாலங்களுக்குள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெண்கள் ஓய்வறை என்ற சொல்லில் காணப்பட்ட தமிழ் பிழை திருத்தப்பட்டு, அதற்கான நிழற்படங்களையும் ரயில்வே பொது முகாமையாளர் நமது TV செய்திப் பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பல இடங்களில் காணப்படும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், அவற்றை திருத்துவதற்கு அதிக காலம் எடுக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், உடனடியாக தவறை திருத்துவதற்கு செயற்பட்ட ரயில்வே பொது முகாமையாளர் ஜெ.டி.ஐ.ஜெயசுந்தரவிற்கு நமது TV சார்பில் பாராட்டுக்கள்.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் சிறப்புற மேப்பட இவ்வாறான அதிகாரிகள் அவசியம் தேவைப்படுகின்றனர்
Link : https://namathulk.com