நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 50 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஏற்கனவே பொலிஸ் நிலையங்கங்களில் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 36 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 53 பேர் சாதாரண கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் களனி பிராந்தியத்தில் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டராக கடமையாற்றிய எஸ்.எம்.ஐ.கே சமரகோன் என்ற பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் துன்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் அனைத்தும் நாளை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.
Link : https://namathulk.com