யாழ்ப்பாணம் வலி.வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைப்பதற்காக கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி, மத பேதமின்றி போது அமைப்புகள், மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து கண்டன போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
தையிட்டி காணி விடுவிக்கப்பட வேண்டும் என ஒருசில அரசியல்வாதிகளும் , பொது அமைப்புகளும் மக்களின் சார்பாக ஒன்றிணைத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
விகாரை கட்டப்பட்டமை சட்டவிரோத செயல் என அனைவரும் கூறி வரும் நிலையில் , சுமார் ஐந்து இலட்சம் பேரிடம் வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
இந்த பின்புலத்தில் அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஜனாதிபதியிடம் இந்த விடயம் தொடர்பில் நேரடியாக விண்ணப்பம் செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
Link : https://namathulk.com
