பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கியதில் காயமடைந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும் தம்மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவித்து, M.P அர்ச்சுனாவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் இருதரப்பினரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிசார் கூறினர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com