அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பொருளாதார நகர்வுகள் மற்றும் வரிவிதிப்புக்களைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.
இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 25 சதவீத கட்டண வரிகள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் முதல் முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு டொலரின் பெறுமதியில் 2,900 ஐத் தாண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் .
அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,942 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வர்த்தகப் போர் தொடர்பான அச்சம் மற்றும் பூகோள அரசியலில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணம் என சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Link : https://namathulk.com