அவுஸ்திரேலியாவில் பணக்காரர் வரிசையில் ரைன்ஹார்ட் மீண்டும் முதலிடத்தில்

Aarani Editor
1 Min Read
அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த 12 மாதங்களில் கிட்டத்தட்ட 10% உயர்ந்து 243 பில்லியன் அவுஸ்திரேலிய டொலரை எட்டியுள்ளது.

அதற்கமைய சுரங்கத் தொழிலதிபரான ஜினா ரைன்ஹார்ட் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தொழில்நுட்ப நிர்வாகிகள் இந்தத் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜினா ரைன்ஹார்ட்டின் சொத்து மதிப்பு 4% குறைந்து ஆஸ்திரேலிய டொலர்களில் 29 பில்லியனாகக் குறைவடைந்தாலும் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை தக்கவைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் வெற்றியின் போது எடுக்கப்பட்ட நிழற்படத்திலும் ஜினா ரைன்ஹார்ட் காணப்படுகின்றமையை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *