இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி அரங்கில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 356 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 357 ஓட்டங்கள் எனும் கடின இலக்கில் 34.2 ஓவர்களில் 214 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதற்கமைய 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 23 ஒருநாள் போட்டிகளில் 16 ஆட்டங்களில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணியை, 14 வருடங்களுக்குப் பின்னர் இந்தியா வெள்ளையடிப்பு செய்துள்ளது
Link : https://namathulk.com