இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஒரகல் நிறுவனம் ஆதரவு.

Aarani Editor
1 Min Read
டிஜிட்டல் மயமாக்கல்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவை சந்தித்தார்.

இதன்போது, பொருளாதாரம் மற்றும் நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் டிஜிட்டல் மாற்றம், பின்டெக் சேவை மற்றும் கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திகொள்ளல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம், கிளவுட் உட்கட்டமைப்பு சேவையை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தரவு சுயாதீன தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளை உறுதிப்படுத்தி, அரசாங்க விண்ணப்பங்கள், இலத்திரனியல் நிர்வாக வசதிகள் மற்றும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை ஸ்தாபிக்க முன்வருமாறு ஜனாதிபதி ஒரகல் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வை விரைவுபடுத்தும் நோக்கில், ஜனாதிபதி மற்றும் ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியா ஆகியோர் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகளுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடினர்.

இதற்காக, கொழும்பு துறைமுக நகரத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கல் மையமொன்றை அமைக்குமாறும் ஒரகல் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அது தெற்காசிய செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் மையமாக செயற்படும் எனவும் அதற்கான குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, பிராந்திய அடிப்படையிலான டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான ஒரகல் நிறுவனத்தின் நோக்குக்கு அமைய அதன் தெற்காசிய செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் மையமொன்றை கொழும்பு துறைமுக நகரில் அமைப்பதற்கு ஒரகல் நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் தெரிவித்தார்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *