இலங்கை, மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் இந்தியாவின் அதானி குழுமத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட எரிசக்தி செயற்பாடுகளிலிருந்து விலகுவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பெரும்பாலான ஒப்புதல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும், சுற்றுசூழல் அனுமதியை பெற்றுக்கொள்ள ஏற்படும் தாமதம் காரணமாக, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில், 484 மெகாவாட் காற்றாலைகளை நிறுவுவதையும், இலங்கையின் எரிசக்தி உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்காக 220 KVமற்றும் 400 KV கொள்ளளவு கொண்ட மின்சக்தி வலையமைப்புக்கு விரிவாக்கத்தை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த முதலீட்டு திட்டத்திலிருந்து விலகும் அதேவேளை, இலங்கைக்கான எதிர்கால திட்டங்களுக்கு அதானி குழுமத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com