ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை இடையிலான பொருளாதாரம், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் முகமது பின் ஹாடி அல் ஹுசைனி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த இருதரப்பு ஒப்பந்தம் உலகளாவிய சந்தைகளில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை பாதுகாப்பதற்கும் ஒரு பாதுகாப்பான சட்ட கட்டமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்த ஒப்பந்தம் விரிவான முதலீட்டு பாதுகாப்பு, மோதல் முகாமைத்துவம் மற்றும் கொள்கை சட்டங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அத்துடன், இருதரப்பு பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளின் உறுதிப்பாட்டை நினைவுபடுத்துவதாகவும் இந்த ஒப்பந்தம் அமையப்பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம், இலங்கையில் வர்த்தகம் மற்றும் வணிக விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் வெளிப்படையான மற்றும் நிலையான முதலீட்டு சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Link : https://namathulk.com