யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மழலைகள் பூங்காவின் ‘மலரும் மழலைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய திருமணமண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை எதிர்காலத்திலாவது உருவாக இப்போதே அடித்தளம் அமைக்கவேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இன்றைய சமூகம் சுயநலம்மிக்கதாக மாறிவிட்டது என வலியுறுத்திய ஆளுநர், பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பழக்கவேண்டும் எனவும் கூறினார்.
அத்துடன், க்ளீன் சிறிலங்கா செயற்றிட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை முன்னெடுத்த முதல் நாளில் குப்பைகளை துப்புரவு செய்தாலும் மறுநாள் மீண்டும் குப்பைகளைக் கொண்டு வந்து அதே இடத்தில் போடுகின்றார்கள் என ஆளுநர் குற்றம்சாட்டினார்.
இந்த மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் எனவும் அதற்காக முன்பள்ளி பருவத்திலிருந்தே சரியான பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com