சிரியாவின் வெளிவிவகார அமைச்சர் ஆசாத் ஹசன் அல்-ஷிபானி(Asaad Hassan al-Shibani ), சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பெரிஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொள்ளும் குழுவிற்கு ஆசாத் ஹசன் அல்-ஷிபானி தலைமை தாங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சிரியாவின் முக்கிய அண்டை நாடுகளையும் அதன் நட்பு நாடுகளையும் ஒன்றிணைத்து உதவி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை ஒருங்கிணைப்பதையும், அமைதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு சிரியா நெருக்கடியைச் சுற்றி ஒரு பாதுகாப்பு குமிழியை உருவாக்க உதவக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com