கிழக்காசிய நாடான தாய்வானில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
தாய்வானின் மேற்கு கடற்கரையில் உள்ள தைச்சுங் நகரில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தின் 12 வது மாடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து குறித்த வணிக வளாகத்திலிருந்து சுமார் 235 பேர்வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 130க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தாய்வான் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com