கண்டி தேசிய வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டுள்ள கட்டுமான பணிகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் ஆராயப்பட்டது.
இதன்படி, கண்டி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு, எலும்புமச்சை மாற்று பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவை அமைச்சரால் கண்காணிக்கப்பட்டது.
இதன்போது, நாட்டின் சுகாதார துறையில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள் முறையான திட்டங்கள் எதுவுமின்றி, சொந்த நலன்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், இவ்வாறான ஒழுங்கற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவது, சுகாதார சேவைக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நிறைவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் உறுதியளித்தார்.
நாட்டில் தற்போது, 03 தேசிய வைத்தியசாலைகள் காணப்படுவதாகவும், இதற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் இன்னுமொரு தேசிய வைத்தியசாலை போதுமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், மக்கள் தொகை மற்றும் புவியில் இருப்பிடத்தை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இன்னுமொரு தேசிய வைத்தியசாலையின் தேவை குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com