நாடளாவிய ரீதியில் இன்று (13) ஒரு மணித்தியாலத்திற்கு சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு வலயத்திற்கும் மாலை 05 மணிக்குப் பின்னர் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, I,J,K,L வலயங்களில் மாலை 05 மணி தொடக்கம் 06.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலத்திற்கு அமுலாகும் வகையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
R,S,T,W,U,V வலயங்களில் மாலை 06 மணி தொடக்கம் 07.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலத்திற்கு அமுலாகும் வகையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை,A,B,C,D,P,Q வலயங்களில் மாலை 07 மணி தொடக்கம் 08.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலத்திற்கு அமுலாகும் வகையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன்,E,F,G,H வலயங்களில் மாலை 08 மணி தொடக்கம் 09.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலத்திற்கு அமுலாகும் வகையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று பிறப்பாக்கிகளும் செயழிலந்துள்ளதால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com