உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கட்டளை சபாநாயகரால் நாளை சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரினால் 2025.02.10ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2423/04 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை அமர்வு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சட்டமூலத்தை ஆராயும் நோக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனை குழுவும் நாளை (14) கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com