யாழ்ப்பாணம் வலி.வடக்கு தையிட்டி விகாரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
” விகாரையை இடிக்க வாரீர்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுக்கும் வகையிலான போலி அறிவிப்புகள் பகிரப்பட்டன.
இந்த விடயத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
எனினும், குறித்த அறிவிப்பு தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை 14 ஆம் திகதி மன்றில் ஆஜராக வேண்டும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com