அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து USAID இன் சகல நிதியுதவித் திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த முடக்கம் சர்வதேச ரீதியாக பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.
நிதி முடக்கம் காரணமாக எச். ஐ. வி, போலியோ, எம்போக்ஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் முதலான நோய் நிலைமைக்களுக்கு எதிரான செயற்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் தெரிவித்தார்.
“அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள், உலக சுகாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையிட்டு கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, எய்ட்ஸ் நிவாரணத்திற்கான ஜனாதிபதியின் அவசரத் திட்டமான PEPFAR இடைநிறுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், இதன்காரணமாக 50 நாடுகளில் HIV சிகிச்சை, பரிசோதனை மற்றும் தடுப்பு சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையானது உலக சுகாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com