சீனாவிற்குச் சொந்தமான டிக்டொக் செயலியானது உலகெங்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு இயங்கிவருகின்றது.
உலகின் சில நாடுகளில் இந்தச் செயலின் பாவனை தடைசெய்யப்பட்டதைப்போல, அமெரிக்காவிலும் கடந்த அரசாங்கம் இதன் பாவனையைத் தடைசெய்திருந்தது.
உளவு பார்ப்பதற்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் டிக்டொக்கை சீனா ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்ற கடந்த அரசாங்கத்தின் கருத்தை சீனா மறுத்திருந்தது.
170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பயனர்களால் பயன்படுத்தப்பட்ட இச் செயலி அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இந்த பயன்பாட்டை தடை செய்வதை ஆதரித்திருந்தாலும், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியின் போது இச் செயலிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த மாதமளவில் மீண்டும் இச்செயலி அமெரிக்காவில் தொழிற்பட ஆரம்பித்தாலும் உடன்படிக்கையின்படி வழங்கப்பட்ட காலக்கெடு நெருங்கியதால் இதன் பாவனை வீழ்ச்சியை எட்டியது.
தற்போது டிக்டொக் செயலியோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி , அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் கூகிள் ஆப் ஸ்டோர்களுக்கு இந்த செயலி வழமைக்குத் திரும்புவதாக கூறப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com