இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூர், பங்களாதேசின் கிழக்கு பகுதி மற்றும் மியான்மருடனான எல்லையில் உள்ளது.
இங்கு 33 லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர்.
மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தினருக்கும் , சிறுபான்மை குக்கி சமூகத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலம் மற்றும் செல்வாக்கு தொடர்பாக இன ரீதியான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன.
இரு சமூகங்களுக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி வன்முறை ஆரம்பித்தது.
இனக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்படும் இந்தப் பகுதியில் முதலமைச்சராக இருந்த பிரேன் சிங் அதைத் தடுக்கத் தவறியதாக கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் முதலமைச்சராக இருந்த என் பிரேன் சிங் , பதவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜினாமா செய்தார்.
புதிய முதலமைச்சர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com