இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரு மின்பிறப்பாக்கியின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்பிறப்பாக்கியிலிருந்து தேசிய கட்டமைப்பிற்கான மின்சார இணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில்
உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்தமையினால் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com