இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்றக்கழகத்தால் எதிர்வரும் 16ஆம் திகதி இராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 20ற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருவதாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இராமேசுவரம் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமை வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com