உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் காரணமாக ஆலையின் நான்காவது மின் அலகு தாக்கப்பட்டதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அணு உலைக்குள் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள போதிலும், ஆலையில் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில் செர்னோபிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கதிர்வீச்சு அளவுகள் இயல்பாகவும் நிலையானதாகவும் இருப்பதாக உலக அணுசக்தி பாதுகாப்பைக் கண்காணிக்கும் IAEA அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Link: https://namathulk.com