கடந்த மூன்று தசாப்தங்களில் 2024 ஆம் ஆண்டே ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமாக அமைந்தது என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் 2024 ஆம் ஆண்டில் குறைந்தது 124 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் கிட்டத்தட்ட 70% காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்தின் செயற்பாடுகளாகக் காணப்பட்டதாகவும், காசாவில் 82 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஊடகவியலாளர்களை குறிவைப்பதை இஸ்ரேலியப் பாதுகாப்புப்படை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டின் இறப்பு எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டில் 113 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதைவிட அதிகமாக காணப்படுகிறது.
அவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஈராக்கில், அமெரிக்கா தலைமையிலான போரில் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டில் உலகளவில் குறைந்தது 24 ஊடகவியலாளர்கள் தங்கள் பணியின் காரணமாக வேண்டுமென்றே கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Link : https://namathulk.com