பனைசார் மற்றும் உள்ளூர் கைப்பணி உற்பத்திகளுக்கான “கற்பகம்” விற்பனை நிலையத்தை நாடு முழுவதும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்திக்கு அருகில்
“கற்பகம்” விற்பனை நிலையத்தை நேற்று திறந்து வைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வடமாகாண தொழிற்துறை திணைக்களமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்துகின்ற “கற்பகம்” விற்பனை நிலைய திறப்புவிழாவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com