பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்ட கல்லூரி பரீட்சையில் சட்டவிரோதமான முறையில் தேற்றியிருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சட்டக் கல்லூரியில் நடந்த பரீட்சையின் போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு சட்டத்தரணிகளின் உதவியோடு பரீட்சை எழுதியதாக இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சங்கத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
இதற்கமையவே குற்றப்புலனாய்வு பிரிவினர் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com