வலுவான கூட்டிணைவு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கு , பாரத பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளத்ர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா உட்பட அமெரிக்காவின் அனைத்து வர்த்தக பங்காளிகளும் பரஸ்பர வரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியில் அதிகளவில் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த வர்த்தக கட்டணங்களில் சிலவற்றை இந்தியா கொண்டிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்ட நிலையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான “பெரும் கூட்டாண்மையை” பாரத பிரதமர் பாராட்டியுள்ளார்.
இந்தியர்களை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்த அனுமதித்ததற்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்த மோடி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்திய பிரஜைகளை திருப்பி அனுப்புவதை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Link : https://namathulk.com