அரசியல்வாதி என்பவர் நாட்டின் திசையை நேர்மறையான திசையில் செலுத்தக்கூடிய ஒரு நபர் என்றும், எதிர்காலத்தில் அத்தகைய அரசியல்வாதியாக உருவாகுவதற்கான உணர்வை வளர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றிய போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் கொலன்னாவ மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்ற தவறான முன்னுதாரணம் காணப்படுவதாகவும், இதை சரி செய்ய வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் சட்டவாக்கத்திற்கு நல்லவர்கள் வர வேண்டும் எனவும், அவ்வாறானவர்கள் , பாடசாலைகள் ஊடாக உருவாக வேண்டும் எனவும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை பிரிவு முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க உள்ளிட்ட பல அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Link : https://namathulk.com