பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவித்தலை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் , பிரதமருக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இன்றைய தினம் பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விரைவில் தேர்தலை நடாத்தும் நோக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு , விரைவில் தேர்தல் நடாத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
Link : https://namathulk.com