யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் வைத்து,பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இளைஞன் ஒருவரை தாக்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
M.P அர்ச்சுனா தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் சபாநாயகருக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிசார் கூறினர்.
சபாநாயகரிடமிருந்து கிடைக்கும் பதிலுக்கு அமைய M.P அர்ச்சுனா தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com